Saturday, January 3, 2009

பொங்கல் வாழ்த்து அட்டை

சின்னங்சிறு வயதில்
அப்பாவிடம் எதை எதை-யோ சொல்லி
காசு வாங்கி
கட்டு கட்டாக இருக்கும்
வாழ்த்து அட்டைகளை
அலசி எடுத்து
எடுத்த பல வாழ்த்து அட்டைகளை
மனக்கணக்கில்
பண பற்றாக்குறையை அறிந்து
மனசில்லாமல் சிலவற்றை விடுத்து
நண்பர்களையும் உறவினர்களையும்
வரிசை படுத்தி
ஒட்டிய தபால் தலைகலை
சரி பார்க்கிறேன் பேர்வழி என்று
கிழித்து ஒட்டி
பலமுறை பரிசோதித்து
அனுப்பிய பொங்கல் வாழ்த்து அட்டைகள்
எங்க போயின எப்போது?

Friday, December 5, 2008

ஐ மிஸ் யு... சென்னை

1. என்ன மச்சி பிரேக் போலாமா-னு கேட்டுட்டு தெருவுல இறங்கி நடந்து ஆபீஸ் பக்கத்துல இருக்குற கடையில நல்ல Strong-a Sugar கம்மியா ஒரு டீ ஆர்டர் பண்ணி, தினத்தந்தி பேப்பர்-ல கடைசி பக்கத்துல இருக்குற Sports news அதுக்கு முன்னாடி இருக்குற சினிமா news-யும் படிச்சிட்டு அப்ப தான் Friend பத்த வச்ச Kings-a இடது கை-யாலையும் சூடா வந்த Tea-ya வலது கை-யாலையும் இழுக்குற சுகம் இருக்கு பாருங்க... அடப்போங்க வைத்தேரிச்சல கொட்டதீங்க...


2. காலை-ல இட்லி சட்னி இல்லன்னா பொங்கல் வடை (வீட்ல இல்லங்க ரோட்டு கடையில...); மத்தியானம் Unlimited ஆந்திரா Meals; Night வழக்கம் போல சிக்கன் பிரியாணி அல்லது Fried rice... நினைக்கும் போதே எனக்கு ஊறுதுங்க...


3. தீபாவளி பொங்கல் வந்தா அடிச்சி புடிச்சி டிக்கெட் ரிசர்வ் பண்ணி ஊருக்கு போயீ அம்மா கையால செம கட்டு கட்டுட்டு அப்புறம் லோக்கல் Friends-கூட தெருதெருவா சுத்திகிட்டு ஸ்பெஷல் Permission-la வீட்டுக்கு Late-a வந்து Late-a தூங்கி, Bet-Coffee குடிக்குற அழகு இருக்கு பாருங்க..அட அட!


4. அதே விசேஷ நாட்களில் தலைவர் நடிச்ச படத்தோட முன்னோட்டம், புத்தம் புது பாடல்கள், சாலமன் பாப்பையா & ராஜா வோட பட்டிமன்றம் அப்புறம் கையில ரிமோட் வச்சிக்கிட்டு எந்த Chennal-லும் ஒழுங்கா பார்க்காம அப்படியே அந்த விசேஷத்த முடிக்குறோம் பாருங்க... அத பத்தி என்னத்த சொல்ல...


5. லோன்-ல வாங்கின பைக்-ஐ வச்சிக்கிட்டு சென்னை ட்ராபிக்-ல பண்ணுற அலும்பு இருக்கே... அதாவது பரவாயில்ல, அந்த பைக் இருக்குற ஒரே காரணத்துக்காக பின்னாடி உட்கார ஒரு பொண்ணு கிடைக்கும்-னு ஒரு Confident-ல இருப்போம்-ல அது தாங்க நம்மோட அக்மார்க் அடையாளம்...

Saturday, November 29, 2008

ஆமை கூடுகள்

வெள்ளி மாலை
அலுவலக ஆமை கூட்டிலிருந்து
வெளியில் வந்தேன்
சுவாசம் சுதந்திரமானது.

நண்பர்களுடன் அரட்டை
லேட் நைட் ஷோ
அதிகாலையில் தூக்கம்
தெரு முனை கடையில் டீ
அம்மா-விடமிருந்து வரும் விசாரிப்புக்கள்
பசியே இல்லாத காலை
வயிறு தெறிக்க மதிய உணவு
எப்போதோ ஊற வைத்த துணிகளை
ஒரு ஏனோ தான துவைப்பு - என்று
இன்ன பிற இத்யாதிகளையும்
முடிப்பதற்குள் வந்து விடும்
திங்கள் காலை.

அவசர அவசரமாக சென்று விடுவேன்
எனது ஆமை கூட்டிற்குள்
எப்போது வரும் அந்த
வெள்ளி மாலை.

Friday, November 21, 2008

சிகெரட்

ஒவ்வொரு சாதனையின் முடிவிலும்
ஒரு சிகெரட் இழுத்த நான் - இப்பொழுது
அதிகமாகவே
உன் புன்முருவல்களினால்

Saturday, September 13, 2008

என் தேவதை

அலாரம் அடிக்க
போர்வையிலிருந்து மீண்டேன்
வேண்டாம் என்றாள்
அரை மனதுடன்
தற்காலிக அமைதி பட்டனை தட்டி
உள்ளே சென்றேன்

மீண்டும் அலாரம்
இன்னும் கொஞ்சம் என்றாள்
தினமும் நடப்பது தானே என்று
உதறி எழுந்தேன்
இரவு பார்த்து கொள்ளலாம்
என் தூக்க தேவதை-யை