Saturday, July 12, 2008

கணிப்பொறியாளன்

அலுவலக காலை
கணிப்பொறியை தட்டி எழுப்பினேன்
ஏராளமான மின்னஞ்சல்கள்

முதல் ஒன்று
சக ஊழியனிடமிருந்து அழைப்பு
மதிய குழு உணவு - சரி என்றேன்

அடுத்த ஒன்று
நண்பனிடமிருந்து
வார விடுமுறை எங்கே என்றான்

மூன்றாம் ஒன்று
அவசர அடுத்த பணி திட்டம்
வந்து என்னை பார் - அதிகாரி

கிளம்பும் முன்
வழக்கமான செய்தி தளம்
ஒரு எட்டு பார்வை

பர்மா-வில் சூறாவளி
பல இழப்புக்களின் தொகுப்பு
ஐயோ மக்கள் பாவம் தான்

சீனா-வில் பூகம்பம
பழி எண்ணிக்கை ஆயிரம் ஆயிரம்
அட கடவுளே உலகம் அழியுதோ

வர்த்தகம் எதிர் பாரா சரிவு கச்சா எண்ணை வரலாறு உயர்வு
ம்... போன வாரமே வித்துருக்கனும்
பர்மா-யும் சீனா-யும் தான் காரணம்

அடுத்த அஞ்சல் - அதே அதிகாரி
நீ இருக்கையிலா
உடன் பதில் தரவும்

கணிப்பொறியை தூங்க வைத்து கிளம்பினேன்
மனதில் பல சிந்தனைகளுடன்
வார விடுமுறை எப்படி கழிக்கலாம்

1 comments:

Anonymous said...

மண்ணாங்கட்டி