வெள்ளி மாலை
அலுவலக ஆமை கூட்டிலிருந்து
வெளியில் வந்தேன்
சுவாசம் சுதந்திரமானது.
நண்பர்களுடன் அரட்டை
லேட் நைட் ஷோ
அதிகாலையில் தூக்கம்
தெரு முனை கடையில் டீ
அம்மா-விடமிருந்து வரும் விசாரிப்புக்கள்
பசியே இல்லாத காலை
வயிறு தெறிக்க மதிய உணவு
எப்போதோ ஊற வைத்த துணிகளை
ஒரு ஏனோ தான துவைப்பு - என்று
இன்ன பிற இத்யாதிகளையும்
முடிப்பதற்குள் வந்து விடும்
திங்கள் காலை.
அவசர அவசரமாக சென்று விடுவேன்
எனது ஆமை கூட்டிற்குள்
எப்போது வரும் அந்த
வெள்ளி மாலை.
Saturday, November 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
தலைவா!
நல்லா இருக்கு லேட்டஸ்டு கவிதை.ஆனா ஹைகூ....? மூணு வரில முடிச்சுடனும் தலைவா!
என் வலைக்கு வாருங்கள்.கருத்து சொல்லுங்கள்.
ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
அன்புடன்
கே .ரவிஷங்கர்
நன்றி தலைவரே
என்ன சொல்ல வாறீங்க?
இது ஹைக்கூ வா என்ன?
உங்க வலை நல்ல இருக்கு
குறிப்பாக வேன் சிறுவன் ஹைக்கூ
நன்றி தலைவா!
நான் சொன்னது "என் தேவதை" என்ற தலைப்பில் எழுதிய கவிதைகளைப் பற்றி.
" ஹைக்கூ" உண்மையான விதிகள் தெரியாது. இப்போது ஒரு corrupted சென்ஸில் உள்ளது.
ஆனால் நடைமுறையில் உள்ள விதிகள்:
உவமை/உருவகம் இருக்க கூடாது. மூன்று வரிகள்தான் இருக்கவேண்டும்.
சுஜாதா ஹைக்கூ பற்றி சொன்னது :-
லாங் சாட், மிட் சாட், க்ளோஸ் அப் என்று மூன்று வரிகள்தான்.க்ளோஸ் அப் அல்லதுzoom ஒருகாட்சிஉறைதல்/திகில்/ஆச்சிரியப்படுத்தல்/திருப்பம் வேண்டும்.
நான் எழுதியது அல்ல:
எங்கோ படித்தது
விழுந்த மலர்
திரும்ப கிளைக்கு செல்கிறது
வண்ணத்து பூச்சி!
மாதத்தில் ஒருநாள்
சலூன்காரன் பொன்னாடை
போர்த்துகிறான் .
நான் எழுதியது
அழகான வீடு
வாசல் கேட்டில்
அழுக்கான பால் பை
………………………………
மூன்று நிமிட
மௌன அஞ்சலியில்
யாருக்கோ வாயு தொல்லை
……………………………..
ஆண் பிணத்தின் இடுப்பு
துணியை ப்ரோகிதர் உருவ
கண் மூடி அழும் பெண்கள்
………………………………..
குடைக்குள் மனைவி
பேசிக்கொண்டு நடக்கிறேன்
பழைய காதலியுடன்
…………………………………..
இதுதான். ஒரு புண்ணாக்கும் இல்ல.
தூள் கிளப்புங்க.
kalakra mappla ..evlo knowledge enga da vaichiruntha ivlo nalla
really good...keep it up
ரவி...
சரியா சொன்னீங்க...
நானும் அப்படி தான் படித்தேன்
முதல் ரெண்டு வரி ஒரு திசையிலும்
கடைசி வரி வேற திசையிலும் இருக்கணும்.
எங்கோ படிச்சா ஹைக்கூ வ காட்டிலும் உங்க ஹைக்கூ சூப்பர்!
Post a Comment