1. என்ன மச்சி பிரேக் போலாமா-னு கேட்டுட்டு தெருவுல இறங்கி நடந்து ஆபீஸ் பக்கத்துல இருக்குற கடையில நல்ல Strong-a Sugar கம்மியா ஒரு டீ ஆர்டர் பண்ணி, தினத்தந்தி பேப்பர்-ல கடைசி பக்கத்துல இருக்குற Sports news அதுக்கு முன்னாடி இருக்குற சினிமா news-யும் படிச்சிட்டு அப்ப தான் Friend பத்த வச்ச Kings-a இடது கை-யாலையும் சூடா வந்த Tea-ya வலது கை-யாலையும் இழுக்குற சுகம் இருக்கு பாருங்க... அடப்போங்க வைத்தேரிச்சல கொட்டதீங்க...
2. காலை-ல இட்லி சட்னி இல்லன்னா பொங்கல் வடை (வீட்ல இல்லங்க ரோட்டு கடையில...); மத்தியானம் Unlimited ஆந்திரா Meals; Night வழக்கம் போல சிக்கன் பிரியாணி அல்லது Fried rice... நினைக்கும் போதே எனக்கு ஊறுதுங்க...
3. தீபாவளி பொங்கல் வந்தா அடிச்சி புடிச்சி டிக்கெட் ரிசர்வ் பண்ணி ஊருக்கு போயீ அம்மா கையால செம கட்டு கட்டுட்டு அப்புறம் லோக்கல் Friends-கூட தெருதெருவா சுத்திகிட்டு ஸ்பெஷல் Permission-la வீட்டுக்கு Late-a வந்து Late-a தூங்கி, Bet-Coffee குடிக்குற அழகு இருக்கு பாருங்க..அட அட!
4. அதே விசேஷ நாட்களில் தலைவர் நடிச்ச படத்தோட முன்னோட்டம், புத்தம் புது பாடல்கள், சாலமன் பாப்பையா & ராஜா வோட பட்டிமன்றம் அப்புறம் கையில ரிமோட் வச்சிக்கிட்டு எந்த Chennal-லும் ஒழுங்கா பார்க்காம அப்படியே அந்த விசேஷத்த முடிக்குறோம் பாருங்க... அத பத்தி என்னத்த சொல்ல...
5. லோன்-ல வாங்கின பைக்-ஐ வச்சிக்கிட்டு சென்னை ட்ராபிக்-ல பண்ணுற அலும்பு இருக்கே... அதாவது பரவாயில்ல, அந்த பைக் இருக்குற ஒரே காரணத்துக்காக பின்னாடி உட்கார ஒரு பொண்ணு கிடைக்கும்-னு ஒரு Confident-ல இருப்போம்-ல அது தாங்க நம்மோட அக்மார்க் அடையாளம்...
Friday, December 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அமெரிக்காவில் இருப்பதால் "பெருமூச்சான் " பெருமூச்சு விடுகிறார் போலும்.
ஆமாங்க அப்போ அப்போ இப்படி தான் தோணும்...
என் நண்பன் ஒருத்தன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேட்டான்...
ஒரு வார விடுமுறை-ல என்ன பன்றோமோ அதையே தான் அடுத்த வாரமும் பன்றோம்...நீ எதாவது வித்தியாசமா செய்றியா-னு கேட்டான்
யோசிச்சி பார்த்தேன் ஒன்னும் தெரில...நம்ப ஊர்ல அப்படியா இருக்கும்?
very nice...
Sithappu rombe thappu......USA poi velai pakka sonna Vetty velai pakkureengala.....
Post a Comment